
இணையதளம் பற்றி.
இந்த இணையதளம் குர்ஆனில் வெளிப்படும் மதச்சார்பற்ற, பகுத்தறிவுமிக்க, மற்றும் அமைதியான வாழ்வியல் முறையைப் பகிர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
குர்ஆன், எழுத்து வடிவில் வெளிப்படுத்தப்பட்ட இறை வேதங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இதன் மூல மொழி அரபி. பெரும்பாலான குர்ஆன் மொழிபெயர்ப்புகளில், மொழிபெயர்ப்பாளரின் கூடுதல் விளக்கங்கள் அல்லது தனிப்பட்ட கருத்துக்கள் அடைப்புக்குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இங்கு, கூடுமானவரை அந்த கூடுதல் சேர்க்கைகளைத் தவிர்த்து, குர்ஆன் அந்த வார்த்தைகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, வார்த்தைகளை அவற்றின் நேரடி அர்த்தத்திற்கு மிக நெருக்கமாக மொழிபெயர்ப்பதில் நான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை குர்ஆனின் செய்தியை நாம் நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்.
முறையான அரபி அல்லது மொழிப் படிப்பு இல்லாவிட்டாலும், குர்ஆன் மீதான எனது ஆழ்ந்த ஆர்வம், அதன் போதனைகளைச் சிந்தனையுடனும் தர்க்கரீதியாகவும் படிக்க என்னை வழிநடத்தியுள்ளது.
இறைவனின் அருளால், இந்த பயணம் தெளிவு, உறுதி மற்றும் பணிவு ஆகியவை எனக்குள் மேன்படுவதை உணரமுடிகிறது. ஒரு மனிதனாக, எனக்கு பலவீனங்களும் கவனச்சிதறல்களும் உள்ளன என்பதையும், அவை பெரும்பாலான சமயங்களில் நான் பெற்ற வழிகாட்டுதலிலிருந்து கவனத்தைத் திசை திருப்பிவிடுகின்றது என்பதையும் மறுக்க இயலாது.
இவ்வாறான சரிவிலிருந்து என்னை மீட்டெடுத்து மேம்படுத்திக்கொள்ள தெய்வீக வழிகாட்டுதலை தொடர்ந்து நினைவில் கொள்வதன் முக்கியத்துவத்தை நான் உணர்கின்றேன்.
இந்த செயல்முறையின் மூலம் பெறப்பட்ட புரிதல் மேலும் வளர்ச்சியடையலாம் அல்லது மேம்படலாம். இருப்பினும், ஒவ்வொரு நிலையிலும், குர்ஆன் மூலம் நான் அனுபவித்த அமைதியான மற்றும் சாந்தமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதே எனது விருப்பம். எனது குர்ஆன் பயணம் பற்றி எழுதுவதும், இந்த அமைதியான எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் எனக்கு ஆறுதலையும், புத்துணர்வையும் தருகிறது, இது என்னை இறைவனின் வழிகாட்டுதலுக்கு நெருக்கமாக்குகிறது மற்றும் எனது புரிதலைத் தெளிவுபடுத்துகிறது.
இப்படித்தான் இந்த இணையதளம் தொடங்கியது.
இங்கு உள்ளவற்றைப் படிப்பதன் மூலம், ஒவ்வொருவரும் தங்கள் சொந்தத் தேர்வுகளைச் செய்ய வேண்டும். சிந்தித்துச் செயல்படுவோம்.
ஏக இறைவன் நம் அனைவரையும் வழிநடத்துவானாக.
இந்த இணையதளம் இறைவனின் வழிகாட்டுதலை நமக்கு நினைவூட்டவதற்கும், அவன் காட்டும் சமாதான வாழ்வியலில் நமது தொடர்பை வலுப்படுத்தவதற்கும் – உதவுமென நம்புகிறேன்.

About
This website has been created to share the secular, rational, and peaceful way of life conveyed in the Quran. The Quran is recognized as one of the Divine scriptures revealed in written form, with Arabic as its original language.
Most Quran translations include extra explanations or personal interpretations by the translator, often shown in brackets. Here, I aim to avoid these extra additions as much as possible, focusing instead on translating words as closely as possible to their literal meaning, based on how the Quran itself uses them. I believe this method helps us better understand the Quran’s message.
My deep interest in the Quran, despite not having formal Arabic or language studies, has led me to study its teachings thoughtfully and logically. By God’s grace, I feel this journey is helping me grow in clarity, determination, and humility. As a human being, I understand that I have weaknesses and distractions that sometimes cause me to lose focus from the guidance I have received. I have realized the importance of always remembering divine guidance to recover and improve.
Over time, the understanding gained through this process may evolve or improve. However, at every stage, my wish is to share the calm and peaceful observations I have experienced through the Quran. Writing about my Quranic journey and sharing these peaceful thoughts with others brings me comfort and new energy, bringing me closer to God’s guidance and clarifying my understanding. This is how this website started.
By reading things here, it is up to each person to make their own choices. Let us think carefully and act wisely. May the One God guide us all. I hope this website helps remind you of God’s guidance and strengthens our connection with His message of peace.

Chapters
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.